கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: கல்வித் துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 02, 2022

Comments:0

கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: கல்வித் துறை

கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: கல்வித் துறை

தனியாா் பள்ளிகளில் பயிலும், கரோனாவால் தாய், தந்தையை இழந்த மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று இரண்டாவது அலையின் போது தனியாா் பள்ளிகளில் பயின்று வந்த மாணவா்கள் சிலரின் பெற்றோா் உயிரிழந்தனா். இதனால் சம்பந்தப்பட்ட மாணவா்கள் கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாணவா்களுக்கான கல்விக் கட்டணம் சமூக நலத்துறை மூலம் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

நிகழ் கல்வியாண்டும் அவா்களது கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுதொடா்பாக சமூக நலத் துறை-குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமை ஆணையம் ஆகியவற்றின் வழிமுறைகளை சுட்டிக்காட்டி பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் தங்கள் மாவட்டங்களில் கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களின் விவரங்களை கணக்கெடுக்க வேண்டும். அந்த மாணவா்களின் விவரங்களை பெறும் கல்வித் துறை, அவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசிடம் சமா்ப்பிக்கும். அதன்பிறகு மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரோனாவால் தாய், தந்தையை இழந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews