Iris should be registered to prevent impersonation in 'NEET' examination
'நீட்' தேர்வில் ஆள் மாறாட்டத்தை தடுக்க மாணவர்களின் கருவிழியை பதிவு செய்ய வேண்டும் என, சி.பி.ஐ., - சி.பி.சி.ஐ.டி., தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக, சென்னை மாணவர் உதித்சூர்யா உட்பட சிலர் மீது, 2019ல் தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்தனர்.கைதான இடைத்தரகர் கேரளா, திரூர் உன்னியலைச் சேர்ந்த ரஷீத் உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.ஏற்கனவே விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், 'இவ்வழக்கில் தொடர்புடைய மாணவர்களுக்காக வெளிமாநில தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம் மூலம் சிலர் தேர்வு எழுதியுள்ளனர்.
'இதுபோல் பிற மாநிலங்களில் நடந்திருக்க வாய்ப்புள்ளது. வரும் காலங்களில் இதுபோல தவறுகள் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து சி.பி.ஐ., பதிலளிக்க வேண்டும்' என்றார்.இந்த வழக்கை நீதிபதி எம்.நிர்மல்குமார் மீண்டும் நேற்று விசாரித்தார். சி.பி.சி.ஐ.டி., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:நீட் ஆள்மாறாட்ட வழக்கில், 13 பேர் கைதாகியுள்ளனர். மூன்று பேர் கீழமை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இரண்டு பேர் முன்ஜாமின் பெற்றுள்ளனர்.
தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது போட்டோ, கைரேகையை தவிர கண்ணின் கருவிழியை பதிவு செய்து பாதுகாக்க வேண்டும்.மாணவர்கள், பெற்றோர் பெயர், முகவரியை முறையாக பதிவு செய்ய வேண்டும். அதற்கு பள்ளி நிர்வாகம் அல்லது அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரியின் சான்றொப்பம் பெற வேண்டும்.இதில், மாறுபாடு இருந்தால் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக அனுமதி வழங்கும் முன் ஆதார், இ.எம்.ஐ.எஸ்., எண், மாணவர், பெற்றோர் பெயர் இரட்டைப் பதிவுகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்தது.இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை பைசல் செய்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.