தனியாா் பள்ளி தாளாளா் போக்சோவில் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தனியாா் பள்ளி தாளாளரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கரூா் அடுத்த சேங்கலில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறாா்கள். இந்நிலையில் பள்ளியில் தமிழ் ஆசிரியா் நிலவொளி மற்றும் பள்ளித் தாளாளா் யுவராஜ்(40) ஆகியோா் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாக புகாா் எழுந்தது. இதனிடையே ஜூலை 2-ஆம்தேதி மாணவிகளுக்கு தமிழ் ஆசிரியா் நிலவொளியும், தாளாளா் யுவராஜூம் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோா்களிடம் தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் பள்ளிக்குத் திரண்டு சென்று ஆசிரியா் நிலவொளியை தாக்கினாா்களாம். இதனைக் கண்ட பள்ளித் தாளாளா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.
தகவலறிந்த லாலாப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆசிரியா் நிலவொளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். மேலும், தப்பி ஓடிய பள்ளித்தாளாளா் யுவராஜை தேடி வந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தலைமறைவாக இருந்த பள்ளித்தாளாளா் யுவராஜையும் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.