தொழில்நெறி விழிப்புணர்வு, திறன் வார நிகழ்ச்சிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: kaninikkalvi.blogspot.com தமிழக அரசின் அரசாணையில் ஆணையிடப்பட்டதின் அடிப்படையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வரும் ஜூலை இரண்டாவது வாரத்தில், அதாவது 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது. 11ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல். 12ம் தேதி மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல்.
13ம் தேதி மூன்றாம் பாலினத்தவருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல். 14ம் தேதி முன் கற்ற திறனை அங்கீகரித்தல் தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல். 15ம் தேதி அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல் போன்ற தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். kaninikkalvi.blogspot.com மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடைபெறும் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வார நிகழ்ச்சிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Search This Blog
Saturday, July 09, 2022
Comments:0
Home
latest tamil news
தொழில்நெறி விழிப்புணர்வு, திறன் வார நிகழ்ச்சிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் பங்கேற்கலாம்: மாவட்ட கலெக்டர் அழைப்பு
தொழில்நெறி விழிப்புணர்வு, திறன் வார நிகழ்ச்சிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் பங்கேற்கலாம்: மாவட்ட கலெக்டர் அழைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.