இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் எண்ணிக்கை குறைப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 23, 2022

Comments:0

இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் எண்ணிக்கை குறைப்பு!

இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் எண்ணிக்கை குறைப்பு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் வாயிலாக மாதந்தோறும் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இம்முறை சென்னை மண்டலத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் ( 15.07.2022 ) இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு செயல்படவேண்டும் என்றும் , அதே கருத்தினை வலியுறுத்தி சிறப்பு பணி அலுவலர் அவர்களாலும் அறிவுரை வழங்கப்பட்டது.

அதன்படி மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் , ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட வேண்டும்.

இதையும் படிக்க | Palli Paarvai TNSED Administrators App - New User Manual - இனி வரும் நாட்களில் விடுப்பு மற்றும் பள்ளி ஆய்வுகள் இவ்வாறு தான் இருக்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திற்கும் இது பொருந்தும் - PDF

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பாக செயல்படவும் , ஏனைய மீதமுள்ள ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மீளவும் பள்ளி பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி செயல்படுமாறும் தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews