இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து மட்டும் 162 கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. இதில், இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடங்களில் இருந்தும் தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
இதில், இவ்வாண்டு நடைபெற்ற தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து மட்டும் 162 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மீதமுள்ள 38 கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தொடக்க கல்வி மாவட்ட மாறுதல் அட்டவணை மாநில பாடத்திட்டத்தில் இருந்து வேதியியல் பாடத்தில் 40 கேள்விகளும், இயற்பியல் பாடத்தில் 48 கேள்விகளும், தாவரவியல் மற்றும் விலங்கியலில் மொத்தம் 74 கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக பாடத்திட்டத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.