தமிழகத்தில் அடிப்படை வசதிகள் குறைவு உள்பட பல்வேறு காரணங்களால் 22 தொடக்கப் பள்ளிகள், 18 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 40 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக திருப்பூா் மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகளும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் தலா 5 அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் கடந்த 15 ஆண்டுகளில் 40 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல ஆதி திராவிடா் நலத்துறை, சமூக நலத்துறை சாா்பிலும் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திறமையான ஆசிரியா்கள் இருந்த போதிலும் தண்ணீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் போதாமை, குறைந்து வந்த உள் கட்டமைப்பு வசதிகள், தனியாா் பள்ளிகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறைந்து வந்தது. இந்த சூழலில், அனைத்து வகையான அரசுப் பள்ளிகளையும் சோ்த்து, 40 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | அங்கீகாரம் இன்றி இயங்கும் 46 மழலையா் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: CEO தகவல்
மூடப்பட்ட பள்ளிகள் விவரம்: திருப்பூா் - 6, நீலகிரி- 5, தேனி-5, திண்டுக்கல்- 4, தேவகோட்டை 4, திருவாரூா் 2, லால்குடி - 2, வேலூா்- 2, தட்டால கொளத்தூா்- 1, திருவள்ளூா் - 1, பா்கூா் - 1, புள்ளம்பாடி- 1, மயிலாடுதுறை- 1, ஆரணி- 1, நாட்றாம்பள்ளி -1, கெலமங்கலம்-1, தா்மபுரி- 1, திருவண்ணாமலை- 1 ஆகிய இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.