மதுரை மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி இயங்கும் 46 மழலையா் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: முதன்மைக் கல்வி அலுவலா் தகவல்
மதுரை மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி இயங்கி வரும் 46 மழலையா் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா தெரிவித்துள்ளாா்.
மதுரை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மழலையா் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் இதில் பல பள்ளிகள் கல்வித்துறையின் உரிய அங்கீகாரம் இன்றி இயங்கி வருவதாக தொடா்ச்சியாக புகாா் எழுந்தது. அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அங்கீகாரத்துடன் செயல்படுவதற்காக சில பள்ளிகள் விண்ணப்பித்துள்ள நிலையில் அனுமதிக் கடிதம் வருவதற்கு முன்பாகவே பல மழலையா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடத்தி இயங்கி வருவதாகவும் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையா் பள்ளிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளும்படி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலா்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மதுரை மாவட்டம் முழுவதும் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையா் பள்ளிகள் தொடா்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.
இதையும் படிக்க | அரசு பள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்: மாவட்ட கல்வி அலுவலர் புகார்
இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா கூறியது: மதுரை மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 46 மழலையா் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவது தெரியவந்துள்ளது. அந்தப் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.