பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழகத்தில், 10, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில், வடக்கு மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகவும் பின்தங்கி இருப்பது கவலை அளிக்கிறது. இரு தேர்வுகளிலும் வேலுார் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. எனவே, வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களை கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து, துவக்கப் பள்ளியில், வகுப்புக்கு ஓர் ஆசிரியர், உயர் வகுப்புகளில் பாடத்திற்கு ஓர் ஆசிரியரை நியமித்தல், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தல் என, சிறப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
நல்ல யோசனை தான்... அதே நேரம், வட மாவட்டங்கள்ல செல்வாக்கா இருக்கும் உங்க கட்சி சார்பில், கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி திட்டங்களை முன்னெடுத்தால் என்ன?
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.