வேதாரண்யத்தில் தொடங்கிய அரசு ஊழியர் சங்கத்தின் பிரசார இயக்கம்.
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளும் பிரசார இயக்கம் இன்று (ஜூன்.20) காலை தொடங்கியது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஏழுமுனைகளில் இருந்து புறப்பட்டு பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கான பிரசாரம் இன்று (20.06.22 ) காலை வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கியது.
மாவட்ட துணைத் தலைவர் கே.இராஜூ தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன், வட்டச் செயலாளர் வி.எஸ்.இராமமூர்த்தி, மாநிலச் செயலாளர் சா.டேனியல் ஜெயசிங், மாநில துணைத் தலைவர் ஏ.பெரியதாசு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.