வேலை வாய்ப்புக்கான பட்டயபடிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி 04-07-2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 21, 2022

Comments:0

வேலை வாய்ப்புக்கான பட்டயபடிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி 04-07-2022

வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயபடிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டபடிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலைநேர பட்டயப்படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல் படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பி.ஜி.டி.எல்.ஏ, மற்றும் டி.எல்.எல். மற்றும் ஏ.எல் ஆகிய பட்ட/ பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணி புரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. ஆகிய பட்ட, பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகளை முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள +2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பிற்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் - ரூ.200/-

for SC/ST - ரூ.100/-

(சாதிச் சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்)

20.06.2022 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். தபால் மூலம் விண்ணப்பங்கள் பெற விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ.200/- (SC/ST ரூ. 100/-) வங்கி வரைவோலையினை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai” என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால்/ விரைவு அஞ்சல்/ கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 04-07-2022 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews