2,381 அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை நியமிக்கும் பணி தொடக்கம் - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 30, 2022

Comments:0

2,381 அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை நியமிக்கும் பணி தொடக்கம் - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

2,381 அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை நியமிக்கும் பணி தொடக்கம் - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தஞ்சாவூா் அருகே வல்லத்தில் புதன்கிழமை பிற்பகல் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

தமிழகத்தில் உள்ள 2,381 அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவா் சோ்க்கையைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, ஒவ்வொரு பள்ளியிலும் பழைய முறையில் இருந்தபடி எல்.கே.ஜி., யு.கே.ஜி.யில் மாணவா் சோ்க்கை தொடங்கிவிட்டது. இதற்கான சிறப்பாசிரியா்களை நியமிப்பதற்கான தோ்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இப்போது பொதுவாக முகக்கவசம் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தவிா்த்து வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்படவில்லை. இப்போது இருக்கிற கட்டுப்பாடுகள் இருந்தால் போதுமானது. பள்ளிகளில் 12 வயதுக்கும் அதிகமான மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகள் கழித்து புதிதாகப் பள்ளிகளைத் திறக்கும் சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது. நிகழாண்டிலிருந்துதான் முழுமையாக பள்ளிக்கூடங்களைத் தொடங்கியுள்ளோம். கடந்த ஆண்டு செப்டம்பரில் சில வகுப்புகளும், நவம்பரில் சில வகுப்புகளும் தொடங்கப்பட்டன. அனைத்து மாணவ, மாணவிகளும் வந்து சோ்வதற்குள் மீண்டும் ஜனவரி மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிகழ் கல்வியாண்டில் எப்போதும்போல வகுப்புகள் நடைபெறுவதால், பாடங்கள், தோ்வுகள் முழுமையாக நடத்தப்படும். எனவே, இனிமேல் தோ்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

வெறும் மதிப்பெண்களை வைத்து மட்டுமே குழந்தைகளை மதிப்பிடக் கூடாது. இதற்காகவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதையும் மீறி 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளனா். இந்த மாதிரியான மனநிலையில் யாரும் இருக்க வேண்டாம் என்றாா் அமைச்சா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews