அரசு பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர் நியமனம் - அரசியல்வாதிகள் மகிழ்ச்சி; பட்டதாரிகள் கடும் அதிர்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 25, 2022

Comments:0

அரசு பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர் நியமனம் - அரசியல்வாதிகள் மகிழ்ச்சி; பட்டதாரிகள் கடும் அதிர்ச்சி

அரசு பள்ளிகளில், 13 ஆயிரம் ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள, 4,989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை, 2023 ஏப்., வரை; 3,188 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை, 2023 பிப்., வரை, பள்ளி மேலாண்மை குழு வழியாக, தற்காலிக அடிப்படையில் நியமிக்க வேண்டும். பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள தகுதியுள்ள நபர்களை, தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் குழுவும், மேலாண்மை குழுவும் இணைந்து, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம், 7,500 ரூபாய்; பட்டதாரிகளுக்கு மாதம், 1௦ ஆயிரம் ரூபாய் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியமாக வழங்க வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வழியாகவும், பதவி உயர்வின் வழியாகவும், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, இந்த தற்காலிக இடங்களை நிரப்ப வேண்டும். இந்த பணிகளை, எவ்வித புகார்களுக்கும் இடமின்றி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் மகிழ்ச்சி

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, ஆசிரியர்களாக நியமித்து, அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்க வேண்டும்.மாறாக, உள்ளூர் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுவில் உள்ள கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களை கொண்டு, ஆசிரியர்களை தேர்வு செய்ய, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, 13 ஆயிரம் ஒப்பந்த ஆசிரியர் பணிக்கும், தங்கள் ஆட்களை நியமிக்க முடியும் என, ஆளும் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதனால், அரசு வேலைக்காக காத்திருக்கும் உயர் மதிப்பெண் பெற்ற பட்டதாரிகளும், அரசு பள்ளிகளை நம்பி வந்த மாணவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews