ஆந்திராவில், 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களில், 34 பேர் தற்கொலை செய்து கொண்டது, மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆறு லட்சம் மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர்.கடந்த 3-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், நான்கு லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துஇருந்தனர்.
தேர்ச்சி அடையாத இரண்டு லட்சம் பேரில் 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவ - மாணவியரின் பெற்றோருக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆறுதல் கூறினார். இதற்கு, ஒய்.எஸ்.ஆர்.காங்., - எம்.எல்.ஏ-.,க்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.