கவுரவ விரிவுரையாளர்களை மதிக்காத தமிழக அரசு: யு.ஜி.சி., தலைவரிடம் புகார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 12, 2022

Comments:0

கவுரவ விரிவுரையாளர்களை மதிக்காத தமிழக அரசு: யு.ஜி.சி., தலைவரிடம் புகார்

மதிக்காத தமிழக அரசு

'கவுரவ விரிவுரையாளர்களை தமிழக அரசு கேவலமாக நடத்துகிறது. எங்கள் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துகிறது' என டில்லியில் பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) தலைவர் ஜெகதீஸ்குமாரிடம் தமிழ்நாடு அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் மாநில தலைவர் தங்கராஜ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.அதில் தெரிவித்துள்ளதாவது: 15 ஆண்டுகளாக சம்பள உயர்வு இல்லை

தமிழகத்தில் 149 அரசு கலை கல்லுாரிகளில் 5500 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். 15 ஆண்டுகளாக சம்பள உயர்வு இல்லை. யு.ஜி.சி., தகுதியுள்ளவர்களை பணிநிரந்தரம் செய்யகோரி போராடி வருகிறோம். ஆனால் உயர்கல்வித் துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்துகின்றனர். எங்களுக்கான உரிமைகள், சலுகைகள் வழங்கப்படுவதில்லை. கைடு ஷிப், மகப்பேறு விடுமுறை, விடுப்பு எடுப்பதில் குளறுபடி, பணிமாறுதல் போன்ற எவ்வித குறைகளையும் அரசு கண்டுகொள்வதில்லை.

யு.ஜி.சி., தலைவரிடம் புகார்

எங்களுக்கு மேஜை, நாற்காலி வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை. மிக கேவலமாக தமிழக அரசு நடத்துகிறது.அகில இந்திய அளவில் 23 மாநிலங்கள் இணைந்து தேசிய கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உரிமைகள் சலுகைகளுக்காக போராட முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டிலும் இதுபோன்ற நிலை நீடித்தால் இக்கூட்டமைப்பு சார்பில் டில்லி யு.ஜி.சி., வளாகம், மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசிய மனித உரிமை ஆணைய அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews