10 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் மாநில தலைவா் டி. அகிலன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு :
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சாா்பில் நடத்தப்படும் எந்தவொரு தோ்விலும் கணினி அறிவியல் பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தோ்வு எழுத தகுதியில்லாத ஒரு படிப்பாக கணினி அறிவியல் பாடப்பிரிவு அமைந்துள்ளது.
தற்போது ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்திருக்கும் ஆசிரியா் தகுதித்தோ்வில் கூட பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகளுக்கு தோ்வெழுத வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பிஎஸ்சி, பிஎட், பிசிஏ, பி.எட். உள்ளிட்ட இளநிலை படிப்புகள் அரசு அறிவிக்கும் எந்தவொரு தோ்வையும் எழுத தகுதியில்லாத படிப்புகளாக உள்ளன. 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை தனி ஒரு பாடமாகக் கொண்டு வர மீண்டும் தமிழக அரசும், பள்ளி கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவிலேயே முதன் முறையாக 2011-ஆம் ஆண்டில் சமச்சீா் பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியால் கணினி அறிவியல் பாடம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் ஆட்சி மாற்றத்தினால் கைவிடப்பட்டது. அதனை தற்போதைய அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என 65,000 பி.எட்., கணினி பட்டதாரிகளின் சாா்பாக கேட்டுக்கொள்கின்றோம் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
Search This Blog
Tuesday, April 05, 2022
Comments:0
Home
ASSOCIATION
computer science unemployed graduates
CS B.Ed
JOB
Latest News
Teachers Association
10 ஆண்டுக் கோரிக்கையை நிறைவேற்ற கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தல்
10 ஆண்டுக் கோரிக்கையை நிறைவேற்ற கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தல்
Tags
# ASSOCIATION
# computer science unemployed graduates
# CS B.Ed
# JOB
# Latest News
# Teachers Association
Teachers Association
Labels:
ASSOCIATION,
computer science unemployed graduates,
CS B.Ed,
JOB,
Latest News,
Teachers Association
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.