வினாத்தாள் 'லீக்' சர்ச்சையில் கல்வித்துறை: மீண்டும் பழைய நடைமுறை பின்பற்றப்படுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 05, 2022

Comments:0

வினாத்தாள் 'லீக்' சர்ச்சையில் கல்வித்துறை: மீண்டும் பழைய நடைமுறை பின்பற்றப்படுமா?

The principals stressed that the district-wise question paper preparation system should be implemented again as the question paper became a 'league' in the second diversion examination for the general examination students.

The same question paper was prepared across the state for the diversion exams for ten, plus 1, plus 2 students writing the general exam. The 10th class question paper was published in Thiruvannamalai in the first diversion examination and there was a controversy. The Plus 2 Maths question paper was released yesterday on the heels of the current second diversion exam as well.

Thus, the Department of Examinations sent all the schools across the state 'email' the question paper at 12:00 noon and ordered it to be held at 2:00 pm. Many government schools did not have printer and xerox facilities and the question papers received in the mail were printed in an emergency at private computer centers according to the number of students. Thus the insecurity in the matter of the question paper again persisted, the editors said. They said, “Question paper does not take drastic action in cases of‘ league ’. Thus the event that is the next question paper 'league' happens. In return, the district wise question paper preparation system should be implemented again. ”

'பொதுத் தேர்வு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்விலும் வினாத்தாள் 'லீக்' ஆனதால் மீண்டும் மாவட்டம் வாரி வினாத்தாள் தயாரிப்பு முறையை அமல்படுத்த வேண்டும்' என தலைமையாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுத் தேர்வு எழுதும் பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. முதல் திருப்புதல் தேர்வில் திருவண்ணாமலையில் பத்தாம் வகுப்பு வினாத்தாள் வெளியாகி சர்ச்சையானது. தற்போது இரண்டாம் திருப்புதல் தேர்விலும் நேற்று முன்தினம் பிளஸ் 2 கணிதம் வினாத்தாள் வெளியாகியது. இதனால் நேற்று நடந்த கணிதம் தேர்வை, மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறையே 'இமெயிலில்' பகல் 12:00 மணிக்கு வினாத்தாள் அனுப்பி, மதியம் 2:00 மணிக்கு நடத்த உத்தரவிட்டது. பல அரசு பள்ளிகளில் பிரின்டர், ஜெராக்ஸ் வசதி இல்லாததால் மெயிலில் வந்த வினாத்தாளை மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தனியார் கம்ப்யூட்டர் சென்டர்களில் அவசர கதியில் பிரின்ட் எடுத்தனர். இதனால் வினாத்தாள் விஷயத்தில் மீண்டும் பாதுகாப்பற்ற நிலை நீடித்தது என தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறுகையில், “வினாத்தாள் 'லீக்' ஆன சம்பவங்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இதனால் அடுத்தடுத்து வினாத்தாள் 'லீக்' ஆகும் சம்பவம் நடக்கிறது. இதற்கு பதில் மீண்டும் மாவட்டம் வாரியாக வினாத்தாள் தயாரிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்” என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews