மன்னிப்பு கேட்பாரா பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 15, 2022

Comments:0

மன்னிப்பு கேட்பாரா பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ்?

ஆர்.நடராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சமீபத்தில், ஜாதிக்கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ், அந்த ஜாதியினரை திருப்திபடுத்தும் விதமாக, 'பிராமணர்கள் என்றால் திருடர்கள்' என்று கேவலமாக பேசியுள்ளார். ஏற்கனவே, ஒரு ஜாதியை சேர்ந்த ஊழியரை தரக்குறைவாகப் பேசியதற்காக, அமைச்சர் கண்ணப்பனின் இலாகா மாற்றப்பட்டது. அதுபோல, அமைச்சர் மகேஷின் பதவியை பறிக்கவோ அல்லது இலாகாவை மாற்றவோ, முதல்வருக்கு துணிவு உண்டா? 'நான், தமிழக மக்கள் அனைவருக்கும் முதல்வர்; என் ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களை கேவலமாக பேசுவதை அனுமதிக்க முடியாது' என்று சொல்லி, அமைச்சர் மகேஷின் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிப்பாரா? அது நடக்காது.

ஏனென்றால், பிராமணர் சமுதாயம் எதையும் கடந்து போகும் என்ற மெத்தனம். அதேநேரத்தில், அமைச்சர் மகேஷுக்கு ஒரு தகவலை சொல்ல விரும்புகிறேன்... தி.மு.க., ௭௫ வருடங்களாக செயல்படும் கட்சியானாலும், அந்தக் கட்சி, ௨௦௨௧ சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க, பீகாரைச் சேர்ந்த பிராமணர் ஒருவரின் உதவி தான் தேவைப்பட்டது. மாநிலத்தின் நிதி நிலைமையை சரி செய்ய குழு அமைத்த போது, அதில் இடம் பெறவும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேவைப்பட்டனர். உங்கள் கட்சித் தலைவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தருவதும், இந்த சமூக டாக்டர்களே. உங்கள் தலைவர் ஸ்டாலினின் மனைவி, ஆலயங்களுக்கு செல்லும் போது, பூஜை செய்யவும் பிராமணர் வேண்டும். திருடர்கள் என்று சொல்லும் இவர்களை ஏன், ஒவ்வொரு விஷயத்திலும் முன்னிலை படுத்துகிறீர்கள். ஏனெனில், மற்றவர்களை விட, இவர்கள் எந்த வேலையையும், அக்கறையோடும், பொறுப்போடும் செய்வர் என்ற நம்பிக்கை தான் காரணம்.முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், 'தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்காதவர்களும், அந்தக் கட்சிக்கு ஓட்டளிக்காமல் போனோமே என்று வருந்தும் அளவுக்கு, என் ஆட்சியின் செயல்பாடு இருக்கும்' என்றார்.அவரின் பேச்சு உண்மையெனில், அமைச்சர் மகேஷை கூப்பிட்டு, பிராமணர் சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும்படி கூற வேண்டும். அப்போது நம்பலாம் முதல்வரின் பேச்சை.

'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்ற சொலவடைக்கு ஏற்ற வகையில், அப்பாவிகளான பிராமணர் களை விமர்சித்துப் பேசி, அவ்வப்போது, யார் மீதோ உள்ள உங்கள் கோபத்தின் அரிப்பை தீர்த்துக் கொள்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews