ஆசிரியர் தேர்வு குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2011ம் ஆண்டுக்கு முன்னர் ஆசிரியர் பணி நியமனம் பெற்றவர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று முந்தைய ஆட்சியில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இலவச கட்டாயக் கல்வி சட்டப்படி ஒன்றிய அரசு தகுதித் தேர்வை கட்டாயம் ஆக்கியுள்ளது.
இத்தகுதி தேர்வு எழுத, கால அவகாசம் கோரிய ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது நியாயமற்றது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பத்தாண்டுக்கும் மேலான பணி தொடர்ச்சி, அதில் அவர்கள் பெற்றுள்ள திறன் மேம்பாடு ஆகியவற்றை உயர் நீதிமன்ற தீர்ப்பு கருத்தில் கொள்ளவில்லை. இந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பால் 4 லட்சம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பெரும் நெருக்கடியை சந்திக்கிறது. ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உரிய சட்ட ஏற்பாடுகளை செய்து, 2011ம் ஆண்டுக்கு முன்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிட வேண்டும்.
Search This Blog
Sunday, April 10, 2022
Comments:0
Home
TRB
Politicians
TET
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.