ரயில்வே பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 27, 2022

Comments:0

ரயில்வே பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பிக்கலாம்!

நாட்டிலேயே முதல் ரயில்வே பல்கலைக்கழகமாக 2018-இல் உள்ள தேசிய ரயில், போக்குவரத்து நிறுவனத்தில் (என்.ஆர்டிஐ) 2022–23-ஆம் கல்வியாண்டில் சேர்ந்து பயில் விண்ணப்பங்கள்வர வேற்கப்படுகின்றன.

இரு பாலருக்கும் தனித்தளியே நவீன விடுதிகள், 100 சதவீதம் வரை யில் உதவித்தொகை, உலகளாவிய கல்வி- தொழில் கூட்டாண்மை, அதிநவீன பசுமை வளாகம் போன்ற நல்ல கட்டமைப்பு வசதிகளோடு, யுஜிசி. ஏஐசிடிஇ ஆகிய சுல்வி அமைப்புகளின் வழிகாட்டுதல்களுடன் ரயில்வே பல்கலைக்கழகம் இயங்குகிறது.

தற்போது பி.டெக், பிபிஏ., பி.எஸ்சி, முதுநிலை படிப்புகள் உள் ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. போக்குவரத்து நிர்வாகத்தில் பிபிஏ (3 ஆண்டு), போக்குவரத்து தொழில்நுட்பத்தில் பி.எஸ்.சி (3 ஆண்டு), பி.டெக். ரயில் உள்கட்ட மைப்பு பொறியியல் (4 ஆண்டு), பி.டெக். ரயில் அமைப்புகள் மற்றும் தொடர்பு பொறியியல் (4 ஆண்டு), பி.டெக் இயந்திர மற்றும் ரயில் பொறியியல் (4ஆண்டு) ஆகிய இளங்கலைப் படிப்புகள் பயிற்றுவிக் கப்படுகின்றன.

போக்குவரத்து நிர்வாகத்தில் எம்பிஏ, விநியோக சங்கிலி நிர்வா கத்தில் எம்பிஏ. போக்குவரத்து தொழில்நுட்பம் மற்றும் கொள்கையில் எம்.எஸ்.சி., போக்குவரத்து தகவல் அமைப்புகள் மற்றும் பகுப்பாய் வுகளில் எம்.எஸ்.சி., ரயில்வே சிஸ்டம்ஸ் பொறியியல் மற்றும் ஒருங் கிணைப்பில் எம்.எஸ்.சி. உள்ளிட்ட முதுகலைப் பாடங்கள் பயிற்று விக்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவம், நுழைவுத் தேர்வுக்கான கூடுதல் தகவல் கள், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துதல் போன்றவற்றை https://www.nrti.edu.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews