1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டது - பணியிடங்கள் நிரப்பப்பட்ட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 27, 2022

Comments:0

1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டது - பணியிடங்கள் நிரப்பப்பட்ட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

பள்ளிக்கல்வி - பள்ளிக் கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பில் ஆசிரியரின்றி உபரியாக இருந்த 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப் பட்டதாரிஆசிரியர்/ இயக்குநர் நிலை-1 பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை பெறப்பட்டது மற்றும் இயக்குநரின் பொதுத் தொகுப்பில் ஆசிரியரின்றி உபரியாக இருந்த 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தேவை உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது - விவரங்கள் குறிப்பிட்டு அனுப்பி வைக்க கோருதல்- சார்பு.

பார்வை

1.அரசாணை(நிலை) எண்.18, பள்ளிக் கல்வி ப.க2(2) துறை நாள்.01.02.2021.

2.தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 48332/டபிள்யு2/இ3/2019, நாள் 04.02.2021.

3.தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 48332/டபிள்யு2/இ3/2019, நாள் 04.02.2021,

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் அரசால் அனுமதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியரின்றி காலியாக இருந்த பணியிடங்களை உபரி பணியிடங்களாக கண்டறியப்பட்டு 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டிருந் பணியிடங்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களாக தரம் உயர்த்தி பார்வை ! ல் காண் அரசாணையின்படி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களாக தரம் உயர்த்தி ஆணை பெறப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பார்வை 2ல் காணும் செயல்முறைகள் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இயக்குநரின் பொதுத் தொகுப்பில் ஆசிரியரின்றி உபரியாக இருந்த 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்களிலிருந்து கூடுதல் தேவை உள்ள பள்ளிக்கு பார்வை 3ல் காண் செயல்முறைகள் வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்ட 1575 பணியிடங்களுக்கு ஒரு Google Sheet Linkயும், 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒரு Google Sheet Linkயும் இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுலவர்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த 2 Google Sheet Link -யை பயன்படுத்தி மேற்காண் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதா அல்லது காலியாக உள்ளதா என்ற விவரம் மற்றும் DDO Code குறிப்பிட்டு 28.04.2022 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews