திட்டக்குடியில் ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராயர், இவரது மகள் உமாராணி (வயது 15) இவர் அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், இந்த நிலையில் நேற்று திருப்புதல் தேர்வு நடைபெற்றது. அப்போது உமாராணி பிட் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஆசிரியர் வாசு உமாராணியை நீ இந்த தேர்வு தற்போது எழுத வேண்டாம் என்றும் நீ நன்றாக படித்துவிட்டு அடுத்த தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
பொதுத்தேர்வில் இதுபோல் தவறு செய்யாதே என்று உமாராணியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த உமாராணி இன்று காலை அவரது வீட்டில் இருந்த எறும்பு மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சிக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அவரது தாய் மஞ்சுளா உமாராணியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு உமாராணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.