பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை
வீட்டில் பூ கட்டிக்கொண்டிருந்த, 14 வயது பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்து, கொடூரமாக கொலை செய்த, வாலிபருக்கு சேலம் போக்சோ நீதிமன்றம், இன்று தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தளவாய்பட்டி ஊராட்சி சுந்தரபுரத்தில் வசிக்கும் 14 வயது பள்ளி மாணவி, கடந்த, 2018, அக்டோபர், 22ம் தேதி, இரவு, 7:30 மணியளவில், வீட்டில் மல்லிகை பூ கட்டிக்கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த, நெல் அறுவடை இயந்திர டிரைவர் தினேஷ்குமார், 25, அரிவாளுடன் வந்துள்ளார். மாணவியின் கழுத்தை அறுத்து, உடலை வெளியே இழுத்து சென்றார். வாலிபருக்கு தூக்கு தண்டனை
இதை பார்த்த அவரது தாய் கதறி அழுதபடி ஓடினார். பின்னர், மாணவியின் தலையை மட்டும், தனியாக வெட்டி எடுத்துக் கொண்டு, சாலை 'முச்சந்தியில்' வைத்துவிட்டு, தினேஷ்குமார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் வந்ததை பார்த்த அவரது மனைவி சாரதா, தம்பி சசிக்குமார் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். மாணவியை வெட்டி கொலை செய்தது தெரியவந்ததால், தினேஷ்குமாரை இரவு, 8:30 மணியளவில், ஆத்தூர் ஊரக போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கு, இன்று, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், மாணவியை கொடூரமாக கொலை செய்த தினேஷ்குமாருக்கு, தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், அவருக்கு 26,000 ரூபாய் அபராதம் விதித்தார். இத்தொகையை மாணவியின் தாயாரிடம் வழங்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.