வினாத்தாள் 'லீக்' விவகாரம் அச்சகங்களில் விசாரணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 05, 2022

Comments:0

வினாத்தாள் 'லீக்' விவகாரம் அச்சகங்களில் விசாரணை

In the Plus 2 second phase diversion exam, it has been ordered to conduct an inquiry in the press on the question paper 'league'.

For 10th class, plus 2 students, two phase diversion exams have been conducted. The second phase diversion exam ends today. Officials shocked The school education officials were shocked when two types of question papers were published in advance on social networking sites during the diversion test for the math subject.

In this case, the investigation into the Quiz League has begun. District Primary Education Officers print the questionnaire at printing presses in their respective districts. It has been ordered to conduct an inquiry in those presses. It has been decided to hold an inquiry into them as well.

"Criminal action will be taken against those who erred in this matter," school education officials said. The second phase of the diversion exam for Plus 2 ends today.

In this case, the diversion exam for Plus 1 class is set to begin today. For Plus 1 students in the current academic year, this diversionary examination is conducted as a first choice, as no examination is conducted. In order to prepare for the general examination, this examination is conducted using the general question paper throughout the state. பிளஸ் 2 இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில், வினாத்தாள் 'லீக்' ஆனது குறித்து, அச்சகங்களில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு இன்று முடிகிறது. அதிகாரிகள் அதிர்ச்சிநேற்று நடந்த கணித பாடத்துக்கான திருப்புதல்தேர்வில், இரண்டு வகை வினாத்தாள்களும், சமூக வலைதளங்களில் முன்கூட்டியே வெளியாகின.முதல் கட்ட திருப்புதல் தேர்விலும், வினாத்தாள்கள் லீக் ஆகி பிரச்னை ஏற்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட தேர்விலும் லீக் ஆனதால், பள்ளிக் கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், வினாத்தாள் லீக் தொடர்பாக விசாரணை துவங்கியுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள அச்சகங்களில், வினாத்தாளை அச்சடித்துள்ளனர். அந்த அச்சகங்களில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், 'யு டியூபர்'கள் சிலர் வினாத்தாள்களை பெற்று, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. 'இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.தேர்வு இன்று துவக்கம்பத்தாம் வகுப்புக்கு நேற்றுடன் இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுகள் முடிந்தன. பிளஸ் 2வுக்கு இன்றுடன் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு முடிகிறது.

இந்நிலையில், பிளஸ் 1 வகுப்புக்கான திருப்புதல் தேர்வு இன்று துவங்க உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு, எந்தவிதமான தேர்வும் நடத்தப்படாத நிலையில், முதல் தேர்வாக, இந்த திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. பொது தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், மாநிலம் முழுதும் பொதுவான வினாத்தாளை பயன்படுத்தி, இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews