தமிழ்நாட்டில் 10ம் வகுப்புக்கு மே 6ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. 12ம் வகுப்புக்கு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. 1ம் வகுப்புக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.அண்மையில் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மே 4ம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதே போல 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பொதுப்பிரிவு, தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வுகளை ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 2ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு குறித்த அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும். அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகளை நடத்திமுடிக்க பள்ளிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து செய்முறை தேர்வுகளும் முடிவுற்ற பின்னர், மதிப்பெண் பட்டியல்களை தலைமையாசிரியர்கள் மே 4ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளிகள் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Friday, April 01, 2022
Comments:0
Home
10th
10th Class Recipe Exam Date Release
EXAMS
Public Exams
10ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி வெளியீடு.. மே 4ம் தேதி மதிப்பெண்களை சமர்ப்பிக்க உத்தரவு!!
10ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி வெளியீடு.. மே 4ம் தேதி மதிப்பெண்களை சமர்ப்பிக்க உத்தரவு!!
Tags
# 10th
# 10th Class Recipe Exam Date Release
# EXAMS
# Public Exams
Public Exams
Labels:
10th,
10th Class Recipe Exam Date Release,
EXAMS,
Public Exams
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.