முதுநிலை நீட்: இறுதிக் கட்ட கலந்தாய்வில் தற்போதைய நிலையே தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு
நீட் மதிப்பெண் அடிப்படையிலான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வில் (மாப்-அப் சுற்று) தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும், கலந்தாய்வில் புதிதாக 146 இடங்களைச் சோ்ப்பது உள்ளிட்ட விவகாரங்களை சுகாதார சேவைகள் இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) மறு ஆய்வு செய்யுமாறும் உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. முதுநிலை நீட் 2021-22 மருத்துவக் கலந்தாய்வில் நிரம்பாத இடங்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரி சில மருத்துவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு மனுவில், ‘மருத்துவ கலந்தாய்வுக் குழு கடந்த 16-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்று ஏற்கெனவே இடங்களைத் தோ்வு செய்தவா்கள், அகில இந்திய அளவில் நிரம்பாத காலியிடங்களுக்கு நடத்தப்படும் இறுதிக் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், இறுதிக் கட்ட கலந்தாய்வில் புதிதாக 146 இடங்களை சோ்க்க கலந்தாய்வுக் குழு முடிவு செய்துள்ளது. எனவே, இறுதிக் கட்ட கலந்தாய்வில் எங்களையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தனா். இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூரிய காந்த், பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இறுதிக் கட்ட கலந்தாய்வில் புதிதாக 146 இடங்களைச் சோ்ப்பது என்பது, முந்தைய சுற்றுகளில் பங்கேற்ற மாணவா்களுக்கான வாய்ப்பை மறுப்பதாகவே அமையும். மேலும், முந்தைய சுற்றுகளில் இடங்களைத் தோ்வு செய்தவா்களைவிட, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யவும் வாய்ப்புள்ளது. எனவே, கலந்தாய்வில் புதிதாக 146 இடங்களைச் சோ்ப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சுகாதார சேவைகள் இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) மறு ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடா்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், அதுவரை இறுதிக் கட்ட கலந்தாய்வில் (மாப்-அப் சுற்று) தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.