அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 23, 2022

Comments:0

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கான குழு விளையாட்டுகளை முதன்மைக் கல்வி அலுவலர் உஷா தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் மூலம் குழு விளையாட்டுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆணையரகம் கடந்த 18ம் தேதி அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பாடவேளை அட்டவணையின்படி உடற்கல்வி வகுப்புகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு கால்பந்து, கைப்பந்து, ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் மாணவர்கள் பங்கேற்றனர்.இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா கூறியதாவது:கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட சீரிய நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகள் நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையரகம் கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடதிட்டத்தின்படி நேற்று முதல் உடற்கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டு விளையாட்டு மைதானங்களில் குழு விளையாட்டுகள் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விளையாட்டு வகுப்பு நேரத்தில் மாணவர்களை மைதானத்தில் விளையாட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதில், ராணிப்பேட்டை கல்வி அலுவலர் அங்குலட்சுமி, உதவி திட்ட அலுவலர் முருகன், பள்ளி தலைமையாசிரியர் அன்பழகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பிரபு, உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews