அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவில் ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர்!
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணாக்கர்களுக்கு இந்த ஆண்டு மட்டுமே மே மாதத்தில் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளி மேலாண்மைக் குழுவின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதற்கான பரப்புரை தொடக்க விழா, சென்னை - கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் 'நம் பள்ளி நம் பெருமை' என்ற புதிய செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து வழக்கம்போல ஏப்ரல் மாதத்திலேயே ஆண்டு இறுதித் தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை அதிகப்படுத்துவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.