கால தாமதமாக பதிவேற்றம் செய்த 10 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 21, 2022

Comments:0

கால தாமதமாக பதிவேற்றம் செய்த 10 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்

ஆன்லைன் தேர்வு எழுதி கால தாமதமாக பதிவேற்றம் செய்த 10 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 3ம் அலை பரவலை அடுத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க | அனைவருக்கும் உயர்கல்வி வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் லட்சியம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதன்படி அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நவம்பர், டிசம்பர் பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதி விடைத்தாள்களை பதிவேற்றம் செய்தனர். இந்தநிலையில் ஆன்லைன் தேர்வெழுதி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாத சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கியும் மாணவர்கள் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யவில்லை. எனவே தாமதமாக பெறப்பட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் தேர்வு எழுதவில்லை என அறிவிக்குமாறு விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் தேர்வு முடிவுகளில் சம்பந்தபட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்று வெளியாகும் என்றும் தகவல் வெளியானது. இந்தநிலையில் ஆன்லைனில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து சென்னை சைதாபேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது: ஆன்லைனில் தேர்வு எழுதிய மாணவர்கள் அச்சப்படத் தேவை இல்லை. தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த மாணவர்களின் விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படும்.

இதையும் படிக்க | வரும் 31ம் தேதிக்குள் ஆதார்-பான் இணைக்க தவறினால் அபராதம்

ஆன்லைன் தேர்வுகளால் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக இனி நேரடி தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும். தாலிக்கு தங்கம் திட்டத்தைவிட மாணவிகளுக்கான உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெறுவோர் அதிகம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews