தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தில் மாநில தலைவர் இளமாறன், துணை செயலாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோரின் அறிக்கை: தமிழக அரசின் வரும் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட், அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையிலும், சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழும் என்பது மிகையில்லை. இதில் பள்ளிக் கல்வி துறைக்கு ஏறத்தாழ ரூ.37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது வரவேற்புக்கு உரியது.
அதேபோல் உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் அறிவிப்பு, பெண்கல்வியை ஊக்குவிக்கும்.
இதையும் படிக்க | பள்ளிகளில் பெற்றோர்கள் கூட்டம் 20.03.2022 அன்று நடத்தும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை
மேலும், பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் நிதி ஒதுக்கீடு, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் என தமிழக அரசின் பட்ஜெட்டில் வெளியான பல்வேறு திட்டங்கள் தமிழக மக்களின் மனசாட்சியாக விளங்கி வருகிறது. மேலும், ஆசிரியர்-அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மானிய கோரிக்கையின்போது 110 விதியின்கீழ் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.