சக ஆசிரியையிடம் 16 லட்சம் மோசடி - பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஓராண்டு சிறை தண்டனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 29, 2022

Comments:0

சக ஆசிரியையிடம் 16 லட்சம் மோசடி - பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஓராண்டு சிறை தண்டனை

சக ஆசிரியையிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த செட்டியூரணி பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கோவில்பட்டி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.கோவில்பட்டி சுபா நகரை சேர்ந்தவர் சுப்பு சுந்தரவடிவு (50), கோவில்பட்டி வெள்ளையம்மாள் நினைவு துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். இதே பள்ளியில் சோமு (53) என்பவரும் ஆசிரியையாக வேலை பார்த்தார். 2014ல் சுப்புசுந்தரவடிவு விருப்ப ஓய்வு பெற்றார்.

இதையும் படிக்க | TNPSC இணையவழி விண்ணப்பம் செய்வதில் புதிய நடைமுறை - செய்தி வெளியீடு

இதன் மூலம் கிடைத்த பணத்தில் ரூ.16 லட்சத்தை தருமாறும், விரைவில் திரும்ப கொடுத்து விடுவதாகவும் சோமு கூறினார். அதன்படி ரூ.16 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து சுப்புசுந்தரவடிவு கேட்டபோது 2018ல் சோமு, ரூ.16 லட்சத்திற்கான செக் கொடுத்தார். அதனை வங்கியில் மாற்ற முயன்ற போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதையடுத்து சோமு மீது சுப்புசுந்தரவடிவு கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி பர்வதராஜ் ஆறுமுகம் விசாரித்து, சோமுவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ஒரு மாதத்திற்குள் ரூ.16 லட்சத்தை திரும்ப கொடுக்க வேண்டும், இல்லையெனில் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நேற்று தீர்ப்பளித்தார். தண்டனை பெற்ற ஆசிரியை சோமு, தற்போது தூத்துக்குடி மாவட்டம் செட்டியூரணியில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews