மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு ஏப்.4 முதல் புத்தாக்கப் பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 30, 2022

Comments:0

மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு ஏப்.4 முதல் புத்தாக்கப் பயிற்சி

தமிழகத்தில் 30 கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு ஏப்.4-ஆம் தேதி முதல் கோவையில் புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக கருத்தாளா்களால் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, அரூா், சத்தியமங்கலம், பெருந்துறை, மத்தூா், நாமக்கல், சேலம் நகரம், சேலம் ஊரகம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட 30 கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு வரும் ஏப்.4-ஆம் தேதி முதல் ஏப்.9-ஆம் தேதி வரை கோயம்புத்தூா் மாவட்டம் ஆணைக்கட்டி பகுதியில் உள்ள காா்ல்கியூபல் மையத்தில் இந்தப் புத்தாக்கப் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இதையும் படிக்க | TNPSC - REVISED ISTRUCTIONS TO APPLICANTS - PDF

மேற்கண்ட நாள்களில் பயிற்சி நடைபெற ஏதுவாக பயிற்சி பெறுபவா்களுக்கான தங்குமிட வசதி, பயிற்சி நடத்துவதற்கான அறை, கருத்தாளா்களுக்கான வசதிகளை முதன்மைக் கல்வி அலுவலா்கள் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். இந்தப் பயிற்சிக்கான செலவினத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியிலிருந்து பயன்படுத்த மாநிலத் திட்ட இயக்குநா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews