பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் ஆசிரியை கண்டித்ததால், பிளஸ்1 மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. கட்டுமான தொழிலாளியான இவரது மகன் ரிதுன் (16), அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று காலை முன்னதாகவே பள்ளிக்குச் சென்றுள்ளார். அதேபோல், உடன் படித்து வரும் மாணவி ஒருவரும், பள்ளிக்கு வந்துள்ளார். இருவரும் வகுப்பறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அந்த மாணவிக்கு, ரிதுன் காதல் கடிதம் கொடுத்துள்ளார். இது தெரிந்து வகுப்பாசிரியை கண்டித்து, மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
உடனே நோட்டுப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு, வகுப்பறையை விட்டு வெளியே சென்ற ரிதுன், மன்னிப்பு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். திடீரென அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். சக மாணவர்கள் அவரை பின்தொடர்ந்து சென்றனர். பள்ளிக்கு அருகில் செல்லும் ரயில்பாதைக்கு சென்ற ரிதுன், அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்தார். அவர் மீது ரயில் மோதியதில் உடல் துண்டாகி உயிரிழந்தார். தகவலறிந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.
Search This Blog
Friday, March 25, 2022
Comments:0
Home
11th and 12th students
அரசு பள்ளியில் இருந்து ஓடிச்சென்று பிளஸ்1 மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை
அரசு பள்ளியில் இருந்து ஓடிச்சென்று பிளஸ்1 மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.