ரிஷிவந்தியம் அடுத்த சின்ன கொள்ளியூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி வளாகத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கரும்பலகைத் திட்டத்தின்கீழ், சிமெண்ட் ஷீட்டிலான கட்டிடம் கட்டப்பட்டது. மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கட்டிடம், சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு, சீமை ஓடுகள் அமைத்து புனரமைக்கப்பட்டது. அதன்பின், இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. இதையடுத்து கூடுதல் பள்ளிக் கட்டிடத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, மீண்டும் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடம் தற்போது செயல்பாடின்றி மீண்டும் பழுதாகி, ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
குறிப்பாக, கட்டிடத்தின் மேலே இருக்கும் ஓடுகள் திடீர் திடீரென சரிந்து கீழே விழுகின்றன. கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த பள்ளிக் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Search This Blog
Friday, March 25, 2022
Comments:0
இடிந்து விழும் அபாய நிலையில் அரசு பள்ளி கட்டிடம்: மாணவர்கள் அச்சம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.