அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 11, 2022

Comments:0

அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்!

''தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேருவதற்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை மேலும் அதிகப்படுத்துவது என்பது, அரசின் கொள்கை முடிவு. ''அதை அரசால் செய்ய முடியும்,'' என, சென்னை உயர் நீதிமன்ற மத்திய அரசு வழக்கறிஞர் கே.எஸ்.ஜெயகணேஷ் கூறினார்.

கொள்கை முடிவு

'நீட் நுழைவுத் தேர்வே வேண்டாம்' என்று, தமிழக சட்டசபை மீண்டும் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுடைய வாய்ப்பை உயர்த்த, வேறு ஏதேனும் வழி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, வழக்கறிஞர் ஜெயகணேஷ் கூறியதாவது:

இதையும் படிக்க | சிவில் சர்வீஸ் தேர்வு எழுத கூடுதல் வாய்ப்பு கிடைக்குமா?

மருத்துவ படிப்பு இடங்களுக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, 27 சதவீதம் வழங்கும் முடிவை எடுத்தது, மத்திய அரசு. அது, அரசின் கொள்கை முடிவு. அதேபோல், தமிழகத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போதுள்ள, 7.5 சதவீதத்தில் இருந்து, 10 அல்லது 15 சதவீதம் வரை உள் ஒதுக்கீடு வழங்க, கொள்கை முடிவு எடுக்கலாம்.இதனால், தகுதியுள்ள இதர பிரிவு மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பது தான் முக்கியம். வாய்ப்பு பாதிப்பு

ஏனெனில், தமிழகத்தில் மொத்தமுள்ள, 7,825 மருத்துவ படிப்பு இடங்களில், மாநில தொகுப்பில், 6,999 இடங்கள் மட்டுமே உள்ளன. பல் மருத்துவத்தில் 1,930 இடங்கள் உள்ளன. இதற்காக, தமிழகத்தில் இருந்து, 1.10 லட்சம் மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுதினர். போட்டி கடுமையாக உள்ள சூழலில், அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படுமானால், அது இதர மாணவர்களுடைய வாய்ப்பை பாதிக்கலாம். தங்களுக்குச் சம வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று, அவர்கள் நாளை நீதிமன்றத்தை நாடவும் முடியும்.

தற்போதுள்ள சூழலில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்பது தொடர்வதே சரி. அதேசமயம், அரசு பள்ளி மாணவர்களை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இதையும் படிக்க | உதயநிதி பிரசாரத்தில் திமுக கொடியுடன் பள்ளி மாணவர்கள்

கூடுதலான மருத்துவ கல்லுாரிகள் துவங்கப்படும் போதோ, இருக்கும் கல்லுாரிகளிலேயே மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் போதோ, படிப்படியாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை உயர்த்திக் கொள்ளலாம். அப்போது, பொதுப் பிரிவு மாணவர்களுடைய வாய்ப்பு பறிபோகும் சூழல் ஏற்படாது. இவ்வாறு ஜெய கணேஷ் கூறினார். - நமது நிருபர் --

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews