7th Pay Commission: அதிகரிக்கிறதா அகவிலைப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 15, 2021

Comments:0

7th Pay Commission: அதிகரிக்கிறதா அகவிலைப்படி?

7th Pay Commission latest news: புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் நல்ல செய்தி கிடைக்கவுள்ளது.

2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. புத்தாண்டில், மீண்டும் ஒரு முறை அகவிலைப்படி அதிகரிப்பு இருக்கக்கூடும். இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கும்.

இருப்பினும், 2022 ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாக முடிவு செய்யப்படவில்லை. ஆனால், AICPI குறியீட்டின் தரவுகளின்படி, இது 3% ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு பணியாளர்களுக்கு புத்தாண்டில் நல்ல செய்தி

டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வுகள் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இது தவிர, 2022 ஆம் ஆண்டின் பட்ஜெட்டுக்கு முன்னர் ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றியும் ஒரு முடிவு எடுக்கப்படும். இவை நடந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும் அதிகரிக்கும். அகவிலைப்படியைப் பற்றி AICPI குறியீட்டின் தரவு மூலம் என்ன தெரிந்துகொள்ள முடிகிறது என பார்க்கலாம்.

அகவிலைப்படி AICPI தரவுகளின் அடிப்படையில் ளால் தீர்மானிக்கப்படும்

நிபுணர்களின் கூற்றுப்படி, 2022 ஜனவரியிலும் அகவிலைப்படி (Dearness Allowance) 3% அதிகரிக்கப்படலாம். அதாவது, 3% உயர்வு இருந்தால், மொத்த அகவிலைபப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரிக்கக்கூடும். AICPI தரவுகளின்படி, செப்டம்பர் 2021 வரையிலான புள்ளிவிவரங்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதன்படி, அகவிலைப்படி (டிஏ) 32.81 சதவீதமாக உள்ளது.

ஜூன் 2021 வரையிலான தரவுகளின்படி, ஜூலை 2021க்கான அகவிலைப்படி 31 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது அதன் மேலதிக புள்ளிவிபரங்களின்படி, அகவிலைப்படி கணக்கிடப்படும், இதில் ஒரு நல்ல அதிகரிப்பைக் காணலாம்.

ஜூலை 2021 முதல் அகவிலைப்படி கணக்கீடு:

ஜூலை 2021: AICPI 353 புள்ளிகள், அகவிலைப்படி 31.81%
ஆகஸ்ட் 2021: AICPI 354 புள்ளிகள், அகவிலைப்படி 32.33%
செப்டம்பர் 2021: AICPI 355 புள்ளிகள், அகவிலைப்படி 32.81%

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews