தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி இலட்சக்கணக்கானவர்களிடம் நிலவி வந்தது.
அதன்படி , 2022-ல் நடத்தப்பட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். 2022 பிப்ரவரியில் குருப் 2 தேர்வுகள், மார்ச் மாதம் குருப் 4 தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அட்டவணை வெளியாகி 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் -1 வரிசையில் வரும் 66 பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல்நிலை தேர்வில் 3,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 3,800 பேருக்கான முதன்மை தேர்வு அடுத்தாண்டு மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழைகளை வரும் 22-ல் இருந்து ஜனவரி 5-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய டி.என்.பி.எஸ்.சி அறிவுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.