நகர்புற உள்ளாட்சி தேர்தல் - பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு - 09.12.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 09, 2021

Comments:0

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு - 09.12.2021

தமிழ்நாட்டில் விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ரிப்பன் மாளிகையில் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்களர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டார்!

பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு

09.12.2021

செ.வெ.எண்.344

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்/முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திருககன்தீப் சிங் பேடி,இஆப,அவர்கள் இன்று (09.12.2021) வெளியிட்டார்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சென்னை

உத்தரவின்படி, பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் முதன்மைச் செயலாளர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இஆப, அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் இன்று (09.12.2021) வெளியிட்டார்.

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின் படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 61,18,734 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 30.23.803, பெண் வாக்காளர்கள் 30,93:355 மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 1576உள்ளனர். ஆலந்தூர் குறைந்தபட்சமாக மண்டலம் (மண்டலம்-12) வார்டு-159ல் 3,116 வாக்காளர்களும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10) வார்டு 137ல் 58,620 வாக்காளர்களும் உள்ளனர்.

மேற்படி வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள 200 வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா என சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்கு 5,284 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 5794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக, தேனாம்பேட்டை மண்டலத்தில் (மண்டலம்-9) 622 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக, மண்டலத்தில் (மண்டலம்-2) 97 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திருவிஷூ மஹாஜன், இஆப., அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews