அரையாண்டுத் தேர்வுகளுக்கு முன்பாக, மாணவர்களுக்கு பாடங்களை விரைந்து நடத்தி முடிக்கும் வகையில், அனைத்து வகை பள்ளிகளுக்கும் சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன. புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தாக்கம் வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து, செப். 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.
மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. நவ. 1ம் தேதி முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் கனமழையின் காரணமாக நடப்பு மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவ, மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளதால், பாடங்கள் விரைந்து நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். எனவே, அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் இனி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
Search This Blog
Monday, November 15, 2021
Comments:0
அரையாண்டு தேர்வு பாடங்களை முடிக்க சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.