திமுக ஆட்சியில் பெருமையின் அடையாளமாக அரசு பள்ளியை உயர்த்துவோம் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 12, 2021

1 Comments

திமுக ஆட்சியில் பெருமையின் அடையாளமாக அரசு பள்ளியை உயர்த்துவோம் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

திமுக ஆட்சியில் பெருமையின் அடையாளமாக அரசு பள்ளியை உயர்த்திக் காட் டுவோம் என்று பள்ளி கட் டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல் நிலை பள்ளியில் பழைய மாணவர் காங்கிரஸ் கட் சியின் மாநில துணைத்த லைவர் எஸ்.எம்.ஹிதா யதுல்லா தனது தந்தை அல்ஹாஜ் எஸ்.முகம்மது முஸ்தபா(கட்டாரி)யின் நினைவாக 3 கூடுதல் வகுப் பறை கட்டிடத்தை கட்டி யுள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமை தாங்கி புதிய வகுப்பறைகள் கட்டி டத்தை திறந்து வைத்தார். கலெக்டர் சங்கர்லால் குமாவத், எம்பி நவாஸ் கனி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராம லிங்கம்.முருகேசன்.கரு. மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் பாலுமுத்து வர வேற்றார். விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி பேசுகையில், "பலபேர் அளித்த மனுக்க ளில் பள்ளிக்கு மிதிவண்டி நிறுத்துமிடம்,பள்ளிக் கட்டிடங்கள் கழிப்பறை வசதி போன்றவைகள் தேவை என கேட்கப்பட் டுள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள் தங்களுக்கான மேம் பாட்டு நிதி வரும்போது இப்பள்ளிக்கு முக்கியத் துவம் அளித்து ஒதுக்கி தரவேண்டும். மக்களுக்கு தேவையான குறிப்பாக பள்ளிக் கூடங்களுக்கு தேவையானது மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான குடிநீர் வசதிக்கு அதிகமான நிதியினை செலவிட வேண்டும்.

அரசு பள்ளிகள் என் பது வறுமையின் அடை யாளம் அல்ல. பெருமை யின் அடையாளமாக அரசுபள்ளியை உயர்த்திக் காட்டுவோம். எங்களை முழுமையாக இயக்கி வரு வது முதலமைச்சர் தான். அதனால் கடமை உணர் வுடன் செயல்பட்டு வரு கிறோம். பெற்றோர் தங்க எதுபெண் குழந்தைகளை பள்ளியின் பாதுகாப்பு நிலையினை அறிந்துதான் அனுப்பி வைக்கின்றனர். இனி வரும் காலங்களில் பள்ளியில் பெண் குழந் தைகளை அதிகமாக சேர்ப்பதற்கான விழிப் புணர்வுடன் செயல்பட வேண்டும். அதற்கு நான் உறுதுணையாக இருப் பேன். மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தேவைகளை உணர்ந்து, செய்து தருவது முதல் கடமையாக இருக் கும். ராமநாதபுரம் பின் தங்கிய மாவட்டம் என சொல்லாதவாறு கல்வி துறையில் மேம்பட்டு இருப் போம். பள்ளிகள் மேம்பட அனைத்து வகையிலும் உறு துணையாக இருப்போம்” என்றார்.

1 comment:

  1. ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் ஊக்க ஊதிய உயர்வு,இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உயர்நீதிமன்றம் தற்போது வழங்கிய தீர்ப்பின்படி,பழைய பென்சன் திட்டம் உடனே தேர்தல் வாக்குறுதியின் படி நிறைவேற்றுக.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews