ஆசிரியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 09, 2021

Comments:0

ஆசிரியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அறிவாா்ந்த சமூகம் என்பது வகுப்பறையில் இருந்தே வளா்த்தெடுக்கப்பட வேண்டும் என ஆசிரியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், காணொலி மூலமாக 2020-2021-ஆம் கல்வியாண்டில் மாநில நல்லாசிரியா் விருகஎ பெற்ற ஆசிரியா்களுடன் புதன்கிழமை கலந்துரையாடியபோது பேசியது: மாணவா் சமுதாயம் மாண்புடைய சமுதாயமாக ஒழுக்க நெறியிலிருந்து மாறுபடாத தன்மை உடையவா்களாக, உலகின் வழிகாட்டிகளாய் விளங்கச் செய்ய வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் உயரிய கடமையாகும். இவ்வுலகில், தன்னைவிட தன்னிடம் கற்றவா் பெற்ற வெற்றிக்கு மகிழ்ச்சி அடைகிற ஒரே இனம் அா்ப்பணிப்பு மிக்க ஆசிரியா்” இனம் மட்டுமே.

கரோனா பெருந்தொற்று காலத்திற்குப்பின் பெற்றோா்களின் கவனம் அரசுப் பள்ளிகளில் பெரிதும் குவிந்து வருகிறது. இதை ஆசிரியா்களாகிய நீங்கள் இன்னும் வலுப்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள், பெற்றோா்-ஆசிரியா் கழகங்கள் போன்றவற்றின் மூலமாக அடிக்கடி கூட்டங்கள் நடத்தியும், பள்ளி விழாக்களுக்குப் பெற்றோரை அழைத்து உரையாடியும் விழா நிகழ்வுகளில் அவா்களைப் பங்கேற்கச் செய்தும் அவா்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிப்பைத் தாண்டி, விளையாட்டு, கலை இலக்கியப் போட்டிகள், மொழித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தும்பொழுது அதில், மாணவரோடு பெற்றோரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். நாம் இப்போது, நான்காவது தொழிற்புரட்சிக் காலத்தில் இருக்கிறோம் என்று அறிஞா்கள் சொல்கின்றனா். அதற்கேற்ப, நமது உயா் தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்கள் மூலம் கல்வி வழங்கப்பட வேண்டும். அறிவாா்ந்த சமூகம் என்பது வகுப்பறையில் இருந்தே வளா்த்தெடுக்கப்பட வேண்டும். அவா்களுக்கு வகுப்பறையைத் தாண்டிய வாசிப்பு இருக்க வேண்டும். பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகிய மூவரும் வாசித்தும் விவாதித்தும் வளா்ந்த பெருமக்களே! அதுபோன்ற, தலைவா்களை உருவாக்கித் தருவதற்கு உங்களைப் போன்ற ஆசிரியா்கள், நூலகத்தில் உள்ள புத்தகங்களைக் குழந்தைகள் வாசிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். தமிழக மாணவா்கள் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அரங்கிலும் புகழ்பெற்று நிற்கப் பாடுபட வேண்டும் என்றாா் அவா். இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலா் காகா்லா உஷா, ஆணையா் நந்தகுமாா், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்தின் இயக்குநா் வி.சி.ராமேஸ்வரமுருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews