புதுச்சேரியில் இளநிலை ஆர்க்கிடெக்ட் படிப்புகளுக்கு வரும் செப்டம்பர் 19ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
புதுச்சேரியில் புதிய கல்வியாண்டு தொடங்கியது முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. மேலும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறுகிறது. மற்ற படிப்புகளை தொடர்ந்து தற்போது இளநிலை ஆர்க்கிடெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் உரிய கல்வித்தகுதி ஆவணங்களுடன் www.centacpuducherry.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இளநிலை ஆர்க்கிடெக்ட் படிப்பிற்கு செப்டம்பர் 19 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரர்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்கள் நாட்டா மதிப்பெண் அடிப்படையில் தங்கள் தகுதியை மதிப்பிட்ட பிறகு விண்ணப்பிக்கலாம்.
மேலும் இளநிலை ஆர்க்கிடெக் படிப்புக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு தேவையான விவரம் தொலைபேசியின் எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் என்று சென்டாக் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.