தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ உதவி – அரசு அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 13, 2021

Comments:0

தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ உதவி – அரசு அறிவிப்பு!

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், சிகிச்சை பெற்றுக்கொள்ள ரூ.5 லட்சம் வரை மருத்துவ உதவி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மருத்துவ காப்பீடு


பொதுவாக மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான சலுகைகள் ஒன்றாக கருதப்படுவது மாநில அரசுத் துறை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவச் சிகிச்சைக்கான தொகையாகும். தமிழக அரசு செயல்படுத்தி வரும் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டமானது, தற்போது சில சீர்திருத்தங்களுடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் இனி அரசு ஊழியர்கள் மருத்துவ சிகிச்சைக்கான தொகையில் ரூ.5 லட்சம் வரை உதவி பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம், எதிர்பாராத செலவுகளுக்காக நிதி மூலதனத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை அரசு ஊழியர்கள் எடுத்துக்கொள்ள முடியும் என நிதித்துறை விளக்கம் கொடுத்துள்ளது. அரசின் இந்த புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிதி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சார்ந்த நிறுவனங்கள், சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வரை பெற்றுக்கொள்ள முடியும்.


இதற்கான காப்பீடு கட்டணமாக ஒவ்வொரு அரசு ஊழியர்களிடம் இருந்து ரூ.300 பிடித்தம் செய்யப்படுகிறது. குறிப்பாக புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை, விபத்து, இதய வால்வு சிகிச்சை போன்றவற்றிற்கான மருத்துவ சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் வரையும் நிதி உதவி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews