தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் (01.08.2021) இன்று மதுரை மாவட்ட அலுவலகத்தில் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டச்செயலாளர்
பெ.சீனிவாசகன் வரவேற்புரை ஆற்றினார். மாநிலப் பொருளாளர் க.ஜோதிபாபு
இயக்கத்தின் மூன்று ஆண்டுகளுக்கான வரவு-செலவு தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
கூட்டப்
பொருள்கள்
மீதான
விவாதத்தைத்
தொடக்கி
வைத்தும்,
இயக்கச் செயல்பாடுகள் குறித்தும் பொதுச்செயலாளர் ச.மயில் விளக்கவுரை
ஆற்றினார். இக்கூட்டத்தில், "கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக
தமிழகத்தில் கடந்த 1/2 ஆண்டுகாலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு விரைந்து கல்வி புகட்ட வேண்டும் என்பதில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பெரிதும் ஆர்வத்துடன் உள்ளனர். சமீபத்தில் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) முதலில் ஆரம்பப்பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளது. அதேபோன்று சென்னை உயர்நீதிமன்றமும் முதலில் ஆரம்பப் பள்ளிகளைத் திறப்பதைப் பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் மாணவர்கள் நெருக்கடி குறைவாக உள்ள பள்ளிகள். எனவே, அப்பள்ளிகளைச் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றித் திறப்பதால்
நோய்த்தொற்று அபாயம் ஏற்படாது. அதே நேரத்தில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகள் சுழற்சி முறையில் செயல்படவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டக் கல்வித் துறையில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவிவருகிறது. அம்மாவட்டக் கல்வித்துறையில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் சிலரின் முறைகேடுகள், விதிகளுக்குப் புறம்பான செயல்பாடுகள், சர்வாதிகாரப் போக்கு, ஆசிரியர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துதல் ஆகியவற்றை எதிர்த்து ஜனநாயக ரீதியில் சங்க நடவடிக்கையாக போராட்டம் நடத்திய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர், மாநிலப் பொதுக்குழு ஆகியோர் உறுப்பினர் தவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கையாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தூண்டுதலின்பேரில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தற்காலிகப் பணிநீக்கம், உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட
வேண்டும்.
தமிழக அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் விரோதப்போக்கில் செயல்பட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அரக்கோணம் மாவட்டக்கல்வி அலுவலர், நெமிலி வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை செய்யப்பட்டது.
மேற்கொள்ளப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்திடவும் முடிவு
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது போல் முதல் 11% அகவிலைப்படி உயர்வைத் தமிழக அரசும் 01.01.2021 உடனடியாக அறிவித்திட வேண்டும். ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த காலத்தை பணிக்காலமாக அறிவித்து தமிழக அரசு உடனடியாக ஆணை வெளியிட வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்ட கலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணியிட மாறுதல்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார். கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ நிதிக்காப்பாளர் ச.மோசஸ் உட்பட மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Search This Blog
Sunday, August 01, 2021
Comments:0
Home
ASSOCIATION
SCHOOLS
TEACHERS
தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளை முதலில் திறக்க வேண்டும்! - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு தீர்மானம்! - Dt: 01.08.21
தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளை முதலில் திறக்க வேண்டும்! - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு தீர்மானம்! - Dt: 01.08.21
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.