வாட்ஸ்ஆப் வழியே பரவும் PEGASUS – மத்திய அரசு விளக்கம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 19, 2021

Comments:0

வாட்ஸ்ஆப் வழியே பரவும் PEGASUS – மத்திய அரசு விளக்கம்!!

வாட்ஸ்ஆப் சமூக ஊடகம் வாயிலாக வேவு பார்க்கும் சாப்ட்வேர் மொபைல் போனில் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையற்ற லிங்க்களை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


PEGASUS சாப்ட்வேர்:

சமீப காலத்தில் அடுத்தவரது மொபைல் போன் மூலமாக வேவுபார்க்கும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலர் இது போன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நமது அந்தரங்க தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு வருகிறது. இது போன்ற தற்போது ஒரு அந்நிய நாட்டு சதிகும்பல் ஒரு புதிய சாப்ட்வேர் மூலமாக மொபைல் போனில் ஊடுருவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு மிஸ்ட்டு கால் கொடுப்பதன் மூலம் செல்போனில் ஊடுவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாப்ட்வேர் மூலம் 50,000 க்கும் அதிகமான செல்போன்கள் வேவுபார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், அதிக அளவிலான இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மெக்சிகோ, பஹ்ரைன், ஹங்கேரி, மொரோக்கோ, ருவாண்டா, அஜர்பைஜான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த எண்கள் உள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முக்கிய நபர்கள் 300 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில், 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், 40க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரது எண்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசு இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது. தனி நபரின் ரகசியம் என்பது அடிப்படை உரிமை, அதனை காப்பதில் எந்த வித தளர்வும் இல்லை என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. PEGASUS சாப்ட்வேர் இமெயில் அல்லது குறுஞ்செய்தி வழியாக கண்காணிக்கப்பட வேண்டிய நபரின் மொபைலுக்கு அனுப்பப்படும். இந்த குறிப்பிட்ட லிங்கை ஒருவர் அழுத்தியதும் அந்த மொபைல் முழுவதுமாக கண்காணிப்பாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும். மேலும், வாட்ஸ் ஆப் எண்ணிற்கு மிஸ்ட்டு கால் கொடுப்பதன் மூலமே அந்த செல்போனில் பெகாசஸ் ஸ்பைவேர் முழுமையாக ஊடுருவி விட முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews