ரேஷன் கார்டில் ஆன்லைனில் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

Comments:0

ரேஷன் கார்டில் ஆன்லைனில் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

ரேஷன் அட்டையில் இருந்து ஒருவரின் பெயரை ஆன்லைன் முறையில் நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள் பற்றிய விதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பெயர் நீக்கம்:

தமிழக அரசு மக்களுக்கு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும், உதவிகளையும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைகள் மூலமாக தான் வழங்கும். மேலும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பித்தல் போன்ற பலவற்றிற்க்கு இது முக்கிய ஆவணமாகும். ரேஷன் அட்டையில் இருக்கும் நபர்களுக்கு திருமணம் முடிந்து அவர்களுக்கு தனி ரேஷன் அட்டை பெறுவதற்கு முன்பாக இருவரின் பெயர்களும் அவர்களின் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.

ஒருவரின் பெயர் ஒரு ரேஷன் அட்டையில் இருக்கும் போதே மற்றொரு ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பது மோசடி செயலாகும். மேலும், குடும்ப உறுப்பினர் இறந்து விட்டாலும், அவரின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்க வேண்டும். ஆன்லைன் முறையில் ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கம் செய்வது மிகவும் எளிதாகும்.

வழிமுறைகள்:

முதலில், தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துரையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpds.gov.in என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அந்த பக்கத்தில், ‘ மின்ணனு அட்டை சேவைகள்’ என்பதை தேர்வு செய்து, ‘குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கம்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இப்பொழுது, புதிய பக்கத்தில் உங்களின் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணிற்கு வரும் ‘OTP’ எண்ணை ‘பதிவு செய்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர், உங்களது குடும்ப அட்டையின் விவரங்கள் திரையில் தோன்றும்.

அதன் இடது புறத்தில், ‘அட்டை பிறழ்வு’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இப்பொழுது புதிய கோரிக்கைகள் என்ற தேர்வை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர், உங்களது ரேஷன் அட்டையின் எண் மற்றும் நியாய விலைக்கடையின் குறியீட்டு எண் ஆகியவை தோன்றும். இப்பொழுது, ‘சேவைகள்’ என்று இருக்கும். அதனை தேர்வு செய்ய வேண்டும்.

இப்பொழுது, திருமணமான ஆண் மற்றும் பெண் இருவரும், திருமண சான்றிதழையும், இறந்தவர்களின் பெயரை நீக்க இறப்பு சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர், பெயரை நீக்கும் காரணத்தை பதிவு செய்து, நீக்கம் செய்யும் நபரின் பெயரை டிக் செய்து, உறுதிப்படுத்த வேண்டும்.

பின்னர், ‘பதிவு செய்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

உங்களது கோரிக்கை சரியாக பதிவு செய்யப்பட்டுவிட்டால், உங்களது திரையில் பச்சை நிறத்தில் டிக் மார்க் தோன்றும்.

இப்பொழுது உங்களது விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வழிமுறைகள் முடிந்த பிறகு இரண்டு, மூன்று நாட்களில் உங்களது பெயர் நீக்கம் செய்யப்பட்டு விடும். இப்பொழுது இணையதளத்தில், ‘அட்டை தொடர்பான சேவை நிலை’ என்ற தேர்வை தேர்வு செய்து, விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.


பெயர் நீக்கம் செய்யப்பட்டவுடன் ‘ சான்றிதழ் பதிவிறக்கம்’ என்பதை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆவணத்தை புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்க சமர்ப்பித்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews