யுசிஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – கல்லூரி நிர்வாகங்கள் கவனத்திற்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 19, 2021

Comments:0

யுசிஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – கல்லூரி நிர்வாகங்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான கலாச்சார நடனங்கங்களுக்கான போட்டி காணொலி மூலம் வரும் ஜூலை 22 ம் தேதி நடைபெறும் என யுசிஜி செயலாளர் தெரிவித்துள்ளார். இணையதளம் மற்றும் ஓடிடி தளங்கள் மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலாச்சார நடனப்போட்டி:
இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். அதனால் ஏராளமான கலைகளும் இடம் பெற்றுள்ளது. இசை, இலக்கியம், நாடகம் போன்ற ஏராளமான கலைகளின் பிறப்பிடமாக இந்தியா உள்ளது. கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள் மக்களிடம் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் அறிமுகம் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பெயர் போன, சிறந்த நடனங்கள் உள்ளது. ஆண்டு தோறும் யுசிஜி கலாசார நடனத்தை சிறப்பிக்கும் வகையில் தேசிய அளவிலான நடன போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்த அமைப்பு பாரம்பரிய இசை கற்பித்தல், யோகா, சமஸ்கிருத வகுப்புகள் மற்றும் நடன வகுப்புகள் நடத்துதல் போன்ற பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இந்த வருடம் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் நேரடி போட்டிகளை நடத்த வாய்ப்பு இல்லை. அதனால் முதல் முறையாக மெய்நிகர் முறையில் நடத்த யுசிஜி அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. போட்டிகள் குறித்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது. இந்தாண்டு இந்தியா நடனம் 75 என்ற கருப்பொருளில் போட்டிகளை நடத்த யுசிஜி திட்டமிட்டுள்ளது. இதன் படி இந்தியாவில் பாரம்பரிய நடனங்களான ஒடிசி, பரதம், குச்சுப்பிடி, மோகினியாட்டம் போன்ற நடனங்கள் ஜூலை 22 முதல் தொடங்கி 4 நாட்கள் நடைபெறவுள்ளது. அவற்றின் சிறப்பு நடனங்கள் 24ம் தேதி நடைபெறும் எனவும், ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இணையதளம் மற்றும் ஓடிடி மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடும் என்றும் யுசிஜி தெரிவித்துள்ளது. மேலும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் போட்டிகளில் மாணவர்களை பங்கு பெற செய்ய ஊக்கப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews