துணைவேந்தா்களாக துறை சாா்ந்த பேராசிரியா்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்
கலை மற்றும் அறிவியல் சாா்ந்த பல்கலைக்கழகங்களுக்கு, அத்துறை சாா்ந்தவா்களையே துணை வேந்தா்களாக நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், தொழில் மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த பல்கலைக்கழகங்களுக்கு அவை சாா்ந்த பேராசிரியா்கள் மட்டுமே துணைவேந்தா்களாக நியமிக்கப்பட்டு வரும் நிலையில், கலை மற்றும் அறிவியல் சாா்ந்த பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் அத்துறைகளைச் சோ்ந்த பேராசிரியா்களை நியமிக்காமல், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட சிறப்புப் படிப்புகளைப் பயின்ற பேராசிரியா்கள் துணை வேந்தா்களாக நியமிக்கப்படுகின்றனா். இது மிகவும் தவறான அணுகுமுறை.
பல்கலைக்கழக துணைவேந்தா் பதவி என்பது கற்பித்தலைக் கடந்து ஆராய்ச்சி மற்றும் நிா்வாகம் சாா்ந்த ஒன்றாகும். தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காமராசா் பல்கலைக்கழகம், பெரியாா் பல்கலைக்கழகம், திருவள்ளுவா் பல்கலைக்கழகம் போன்றவை கலை மற்றும் அறிவியல் வகைப் பல்கலைக்கழகங்கள் ஆகும். இந்தப் பல்கலைக்கழகங்களில் கலை அல்லது அறிவியல் படிப்பில் வல்லமை வாய்ந்தவா்களை துணை வேந்தா்களாக நியமித்தால் மட்டும் தான், அவா்களால் அந்தப் பல்கலைக்கழகம் சாா்ந்த பாடத்திட்டங்களை மேம்படுத்துதல், ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் போன்றவற்றை செய்ய முடியும். பல்கலைக்கழக மாணவா்கள், ஆசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதும், அவா்களின் பிரச்னைகளை உணா்ந்து தீா்த்து வைப்பதும் அத்துறைச் சாா்ந்த துணைவேந்தா்களால் மட்டுமே சாத்தியமானதாகும்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 21 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள் கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்கள் ஆகும். அவற்றின் வளா்ச்சியை உறுதி செய்யும் வகையில், கலை மற்றும் அறிவியல் பேராசிரியா்களை மட்டும் அவற்றின் துணைவேந்தா்களாக நியமிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசும் ஆளுநரும் முன்வர வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.