கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொலைதூர மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், நாளை மாலை அதற்கான முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள்:
கடந்த கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஏதும் நடக்கவில்லை. அனைத்தும் ஆன்லைன் வகுப்பு மூலமாக மட்டுமே கற்பிக்கப்பட்டது. தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும், இறுதி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்துவதற்கு அரசு முடிவு செய்தது.
பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு உதவும் விதமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதன்படி, 12ம் வகுப்பு மதிப்பெண்கள் கடந்த வாரம் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு முன்னதாக தனியார் கல்லூரிகளில் சேர்க்கை தொடங்கப்பட்டு விட்டது. ஆனால் அரசு கல்லூரிகளில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை இளங்கலை மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறும். அதன் பின்னர் வகுப்புகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த வருடம் அதாவது 2020 டிசம்பர் மாதம் தொலைதூர மாணவர்களுக்கான தேர்வுகள் சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், தேர்வின் முடிவுகள், http://ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும், மாணவர்கள் இந்த தளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.