தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் 11ம் வகுப்பில் இடை நிறுத்தம் செய்த மாணவர்களையும் சேர்த்து குளறுபடி செய்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்வுத்துறை நோட்டீஸ்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைகளை வைத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. கடந்த ஜூலை 19ம் தேதி தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்தாண்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவுகிறது. தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை பள்ளிகள் வாரியாக அனுப்ப உத்தரவிட்டது. இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கும், 11ம் வகுப்பில் இடைநிறுத்தம் செய்த மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டுளளதாக அரசு தேர்வு துறைக்கு தகவல் வந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் விசாரணை தொடங்கப்பட்டது. அதில் மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண் பட்டியல் மற்றும் அவர்களின் வருகைப் பதிவு விபரங்களை பள்ளிகளில் இருந்து வழங்கியதாக, முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 12ம் வகுப்பில் சேர மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்படவில்லை என்று தெளிவாக விளக்கமளித்துள்ளனர். இதனை கேட்டறிந்த பள்ளிக்கல்வி இயக்குனரகம் தவறான தகவல் அளித்த பள்ளிகள் மீது விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. 11ம் வகுப்பில் இடைநிறுத்தம் செய்து TC வாங்கிய மாணவர்களையும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியலில் சேர்த்து குளறுபடி செய்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.